உன்னை பார்த்தா போதும்,
என் வாழ்வின் துன்பங்கள் தீரும்,
உன்னை கட்டி அனைத்தாலே – என்
ஜென்மமும் தீரும் !!!

உன்னை நான் முத்தாட,
நம் வீட்டில் விளையாட – நான்
காத்திருக்கிறேன் – நீ வந்தாலே
போதும் என் வாழ்வின்
நிலைமையும் மாறும் !!!

என் வாழ்வின் அர்த்தங்கள்
எதுவென்று தெரியாமல்;
உன் குறுநகையில் – அதை
நான் கண்டேனடி !!!

தெய்வத்தின் உருவங்கள்
எதுவென்று தேடி – உன்
உருவாய் நம் வீட்டில்,
விளையாட கண்டேனடி !!!

One Reply to “உன்னை பார்த்தா போதும்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *