மகளே என் மகளே,

என் உயிரணுவில்,
விதையாய் விந்திட்ட
உயிரின் சிறுதுளியே..

உன்னை நின் கருவறையில் – ஏற்க வழியில்லை,
அதன் விட்டகுறையோ,
நான் காணாத, சில உலகத்தை – நீ
காண உன்னை தோள் மீது தூக்கிச்சென்றேன் !!!

இந்த உலகம், யாரையும் வரவேற்க தவறியதில்லை,
நீ பார்க்கும் பார்வையில் – உன் பாதை போகிறது !!!
சற்றே விழித்திப்பார், உன் பாதையில்
இந்த உலகத்தை வழிநடத்து !!!

வெற்று அறிவுரை சொல்லும் – அப்பனாக நானில்லை,
உன்னை,
முத்தமிட்ட முதல் நண்பனாக,
அள்ளியணைத்த முதல் காதலனாக,
நான் இழந்ததை, என் மகள் பெறவேண்டும் – இந்த
உலகத்தில்
உனக்கென்று ஒரு
தனித்துவம் வேண்டும் !!!

நீ
யாசகம் கேட்டு – வாழ நேர்ந்தாலும்,
உழைக்காமல் யாரிடமும் –
அன்பாய் கூட பணம் வாங்கிவிடாதே !!!

அது,
உன்னை நீயே இழக்கநேரிடும்,
நண்பனை கூட பகைவனாய் மாற்றும்,
சொந்தங்கள் மத்தியில்,
மரியாதை கூட செருப்பாய் தேயுந்துவிடும்,
கடவுள் கூட, சிலையாய் மட்டும் தெரியும்..
எல்லாம் கிடைக்கும், ஆனால் எதுவும் உனக்கல்ல…
அடிமை என்னும் சொல்லின் அர்த்தமே – உன்னை
கூனி குறுகளின் காட்சியாகிவிடும்….

காலங்கள் ஒருபோல்தான் பயணிக்கும் – நம்
தேவைகளை போல் அதன் குணம் மாறும்…
ஒருபொழுதும்,
எதற்காகவும்,
யாருக்காகவும்,
அது நிற்காது, வளைந்தும் கொடுக்காது,
உண்மையை மட்டும் சொல்லும், ஒரு அதிசியம்..
காலம் !!!
அதை தவறவிட்டால் – உனக்கு தூக்கம் இல்லை மகளே !!!

நீ காற்றை போல் நட,
நீ வானம் போல் மனம் கொள்,
நீ நெருப்பை போல் போராடு,
நீ நீரை போல் தன்மை கொள்,
நீ நிலம் போல் அனைவரையும் கொண்டாடு…

நீ உணவு இழந்தால் – ஒரு மனிதனுக்கு உணவு
கிடைக்கும் தருவாயில் – உன் பட்டினி மதிக்கப்படும் !!!

கருணை கொள், ஏமாந்துவிடாதே..
பொறுமை கொள், அடங்கி போகாதே..
ரௌத்திரம் பழகு – அதை சரியான தருணத்தில் பழகு !!!

உன்னை நீ புரிந்துகொள்ள, உலகத்தில் இரண்டு ஆயுதங்கள்
அம்மா – புத்தகம் !!!
கண்ணாடியின் பிம்பம் போல் – உன்னை
அடையாளம் காட்டும் முதல் தெய்வம் உன் அம்மா – உன்னை
யாரென்று எடுத்து சொல்லும் ஒரு நிஜமான நிழல் – புத்தகம் !!!

அன்பு என்னும் சிறு கூட்டினால்,
உன்னையும், என்னையும் கட்டியாலும்,
ஒரு மஹாராணி அவள் !!!

நீ அவளிடம் மனம் திறந்தாள்,
வேறு உலகம் எதுவும் இல்லை,
ஆறுதல் சொல்ல !!!

அது போல், புத்தகம் – உன் சிறந்த நண்பன் !!!
வாசி, எழுது, பழகு,
நீ யார் என்று அறியப்படுவாய் !!!

கோர்வையான சம்பவங்கள்,
அடுத்த நொடியின் சுவாரஸ்யம்,
அதை கொண்டு, உனக்கு நீயே –
எழுதப்படும் திரைக்கதை – நடக்கும்
அனைத்து காரியங்களுக்கும் – காரணம்
நீயன்றோ !!!

தடைகளை உடை,
நேர்பட பேசு,
துணிந்து செல்,
விழுந்தால் அழாதே,
அழுதால் தோற்றுவிடுவாய்,
பல முறை விழுந்தால் – வெற்றி !!!

சொந்தங்களை நேசி,
நண்பனை கொண்டாடு,
அம்மாவை கைவிடாதே,
அப்பாவை நினைத்துக்கொள்,

உன்போல் – யாரும் இல்லை மகளே,
நீ ஒரு தனித்துவம்,
ஓவ்வொரு நொடிகளிலும்
நீ காணாத சில மனிதர்களையும்
சந்திப்பாய் – கலங்காதே – நிமிர்ந்து நில் !!!

காதலும் வரும்,
தோல்வியும் வரும்,
அன்பும் வரும்,
அரவணைப்பும் வரும்,
ஏற்று கொள் !!!

ஒரு முறை வாழ்க்கை,
வாழ்ந்து விடு,
அன்பு பழகு,
விட்டுக்கொடு – கெட்டுவிட மாட்டாய்,
பகைவணை அரவணைத்து வைத்துக்கொள்,
தோற்றுவிடமாட்டாய் !!!

நீ சற்றே, தளர்ந்துவிட்டால் – உன்
நிழலும் பகையாகிவிடும் – ஏனென்றால்
அதுவும் உன்னுடன் வருவதில்லை..

சிரிப்போடு இரு,
சிறப்போடு இரு,
மகளே !!!

உன் உயிருள்ளவரை – நீ
கொண்டாடும் ஒரு தெய்வம்
உன் அம்மா…
பார்த்துக்கொள் !!!

ஆனால்,

இது தான் உலகம், என்று என்னும் பொழுது,
உன் தகப்பன் நிழல் மட்டும் என்றும் உன்னை தொடரும் !!!

5 Replies to “மகளே என் மகளே !!!”

  1. இது தான் உலகம், என்று என்னும் பொழுது,
    உன் தகப்பன் நிழல் மட்டும் என்றும் உன்னை தொடரும் !!! Alwaysss 💝

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *