உனக்காக காத்திருக்குக்ம் – அந்தி
மாலை பொழுதில் – எனையின்றி, என்
மனப்பதிவுகள் செல்கிறது,
காலத்தின் பின்னால் !!!
காரணம் ஏதுமின்றி,
பிறக்கிறது கள்ளமில்லா புன்னகை !!!
கனவுகளே,
நினைவாக மாறி,
உன்னை அணைக்க
தேடுகிறது என் கைகள் !!!
உனக்காக –
சிரித்த நாட்கள்,
பார்த்த பார்வைகள்,
துயரம் சாய தோள்கள்,
வாழ்ந்த நொடிகள் !!!
அனைத்தும் கனவாய் – என்று
நினைத்துகொண்டு இருக்கும் பொழுது,
சட்டென்று…
விழிக்கின்றேனடி – நம்
பிள்ளையின் மழலையில் !!!
Sema..sema..sema…lovely..interesting…😍😍😍😍